குழந்தையிலக்கியம் பட்டியல்கள்

child

குழந்தையிலக்கிய அட்டவணை

ஜெ

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

நேஷனல்   புக் டிரஸ்டின் குழந்தைகளுக்கான  புத்தகங்கள்   என்னைப்  பொறுத்தவரை  பெருமளவு  தரமான  புத்தகங்கள்.  ஒரே தலைப்பு  எல்லாமொழிகளிலும். தமிழில்,  நிறைய உண்டு.

புத்தக பட்டியலின் இணைப்பு கீழே

NBT

http://www.nbtindia.gov.in/writereaddata/attachment/thursday-april-03-201412-14-16-pmchildren-catalogue-2014.pdf

CBT

http://www.childrensbooktrust.com/downloads/cbt-books-catalogue.pdf

இவை  தவிர  தூளிகா,  கரடி  டேல்ஸ்,  பிரதம்  ஆகியவை  தமிழ்-ஆங்கிலம் இணைந்த  இருமொழி   புத்தகங்களை  வெளியிடுகின்றன.

வயதுக்கேற்ற  புத்தகங்கள் என்று போடுவதெல்லாம்  பதிப்பகங்களின்  ஒரு சின்ன gimmicks.  அதில்  ஓரளவே  அர்த்தமிருக்கும்.  நான்  நினைப்பது  தவறாகவும்  இருக்கலாம்.    புத்தகங்களைப் புரட்டி  பார்த்து  கொஞ்சம்     intuitive  ஆக (நம்முடைய  மனச்சாய்வுகளை   ஒதுக்கிவைத்துவிட்டு)   தேர்வு  செய்து  கொடுக்கலாம்.

‘இதனால்  அறியப்படும்  நீதி  என்னவென்றால்’  வகை  புத்தகங்களையும்  கொஞ்சம்  தள்ளி வைக்கலாம்.

வாசிக்க/ வாங்கிக்  கொடுக்க  ஆரம்பித்தால்  ஒன்று  மற்றொன்றுக்கு இட்டுச்செல்லும்.

அன்புடன்

மங்கை

***

அன்புள்ள மங்கை

ஆம் நீங்கள் சொல்வதில் ஒரு முக்கியமான நீதி இருக்கிறது- அது குழந்தைக்கதைகளில் கற்பனையே முக்கியம் நீதி முக்கியமல்ல என்பது. பனிமனிதனை வாசித்த பல ஆசிரியர்கள் அதில் நீதி இல்லை என உளம் வெதும்பினார்கள். எந்தக்குழந்தையும் சொன்னதில்லை

ஜெ

அன்பின் ஜெயமோகன்,

சில மாதங்களுக்கு முன்னால், எனது நண்பர்கள் சிலருக்காக அவர்கள் குழந்தைகளுக்கு வாசிப்பை அறிமுகப்படுத்தும் விதமாக 8,9,10ம் வகுப்பு படிப்பவர்கள் வாசிப்பதற்கு ஏதுவான ஒரு நூல்பட்டியலைப் பரிந்துரைத்தேன். கீழே பட்டியலிடப்பட்டுள்ள புத்தகங்கள் குழந்தைகளின் வாசிப்புக்கு நல்ல தொடக்கமாக அமையக் கூடியவை.

1.ஸ்ரீ விவேகானந்தர் ஜீவிதம்-சுவாமி சித்பவானந்தா

2.இராமாயணம்-சுவாமி சித்பவானந்தா

3.மகாபாரதம்-சுவாமி சித்பவானந்தா

4.உலகை உய்வித்த உத்தமன்-சுவாமி சித்பவானந்தா

5.கல்வி-சுவாமி சித்பவானந்தா

6 .ஸ்ரீ ராமகிருஷ்ணரின் குட்டிக் கதைகள்-ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்

7.சுவாமி விவேகானந்தர்-படக்கதை-ஓவியம்:பத்மவாசன்-ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்

8.பனிமனிதன்-ஜெயமோகன்

9.கால் முளைத்த கதைகள்-எஸ்.ராமகிருஷ்ணன்

10.சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்-எஸ்.ராமகிருஷ்ணன்

11.Manga comics of Gauthama Buddha

12.Manga comics of Mahathma Gandhi

13.Physics for entertainment

14.Mathematics can be fun

அன்புடன்,

பிரபு மயிலாடுதுறை

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 28
அடுத்த கட்டுரைகேரளத்தில் தலித் பூசகர்கள் -கடிதங்கள்