சென்ற செப்டெம்பர் 5 அன்று சென்னை செந்தில் மதுரைக்கு வந்திருந்தார். சமணர்குகைகளுக்கு ஒருநாள் பயணம். “சார் செப்டெம்பர் 5 நினைவிருக்கா?” என்றார். “என்ன?” என்றேன். “நாம போன முதல் இந்தியப்பயணம் சார். 2008. இப்ப ஒன்பது வருஷம் ஆயாச்சு. புக் வந்து எல்லாமே இப்ப ஹிஸ்டரியா மாறியாச்சு”
ஆச்சரியமான இருந்தது. ஒரு மலரும் நினைவு. செப்டெம்பர் ஐந்தாம் தேதி தாரமங்கலத்தைக் கடந்துவிட்டிருந்தோம். சிலநாட்களாகவே பயணத்தின் நினைவாகவே இருக்கிறேன்
சென்ற வாரம்தான் கிருஷ்ணனைக்கூப்பிட்டேன். “கிருஷ்ணன், ஒரே ஊரில் ஒரே வீட்டிலிருந்து ஒரே பாதையில் ஒரே டீக்கடைக்குச் சென்று டீகுடிப்பது மொண்ணைத்தனமாக இருக்கிறது. எங்கே என்றே தெரியாத ஊரில் முழுமையாகத் தொலைந்துபோய் அமர்ந்து ஒரு டீ குடிக்கவேண்டும்” என்றேன். ”அக்டோபர் நல்ல மாசம், கெளம்பிருவோம்” என்றார். மத்தியப்பிரதேசத்தின் கோண்டு -சந்தால் பண்பாட்டைப்பார்ப்பதற்கான ஒரு பயணம்.
நினைவில் செப்டெம்பர் ஐந்து. 2008ல் இந்தியப்பயணம் தொடங்கியது. 2013 செப்டெம்பர் ஐந்தில் காஷ்மீர் வழியாக இமையமலைப்பயணம் முடிவுற்றது
இந்தியப் பயணம் 1 – புறப்பாடு செப் 5
இமயமலைப்பயணம் செப் 5