மதுரையில் சந்திப்பு

index

அன்புள்ள ஜெ ,

தங்களின் ‘மதுரையில் சந்திப்பு’ பதிவைப் பார்த்தேன். முதல் பத்தியில் ‘வரும் செப் 3 என்று சொல்லியுள்ளீர்கள். இரண்டாம் பத்தியில் ஜூன் ஆறாம் தேதி என்கிறீர்கள். அது என்ன அசச்சுப் பிழையா ? அது செப் ஆறு என்றால், தங்களை பார்க்கலாம் என்றால் எங்கு வரவேண்டும். நான் ஐந்து மதியம்தான் , எனது ஊரான கரூருக்கே வருகிறேன். ஆனால் , ஆறாம் தேதி வர முயற்சிக்கிறேன்.

அன்புடன்,

வ சௌந்தரராஜன்

ஆஸ்டின்

***

அன்புள்ள சௌந்தர ராஜன்

செப்டெம்பர் 3 அன்று மதுரையில் உயிர்மை விழாவில் பங்கெடுக்கிறேன். ஆகவே நண்பர்களைச் சந்திக்கலாம் என நினைத்தேன். ஆனால் உற்சாகமான எதிர்வினை இல்லை. ஐந்துபேர் மட்டுமே சந்திக்க விரும்பி எழுதியிருந்தனர். [மதுரையில் இதை ஓரளவு எதிர்பார்த்துமிருந்தேன்] ஆகவே சந்திப்பு நிகழ்ச்சி தேவையில்லை என முடிவுசெய்திருக்கிறேன். வேறு பயணம் திட்டமிட்டிருக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைதன்னை அழிக்கும் கலை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 90