வெண்கடல் -கடிதம்

Dinka Woman Dancing

 

வெண்கடல்

மதிப்பிற்குரிய ஜெமோ,

 

வெண்கடல் கதையில் வரும் வெண்கடல் முடிவு நிஜமா கற்பனையா? நிஜமெனில் பயோலொஜிக்கல்லி இது சாத்தியமா? ஏனெனில் “டிமாண்ட் அண்ட் சப்ளை” அடிப்படையில  நடக்கிற விஷயத்துக்கு, குழந்தையும் இல்லை அது உணவிற்கான தேவையும் இல்லை எனில் ஒரு தாய் இந்த அளவுக்கு கொடுமை அனுபவிப்பது நான் யோசித்த வரை மிகையாகவே தோன்றுகிறது! அதற்கு கதையில் கொடுக்கப்படும் டிரீட்மெண்ட் சென்ஸிபிளா இருந்தாலும் தாயின் pitutary gland அதற்கான அவசியத்தையே இல்லாமல் செய்துவிடும் இல்லையா?

 

ரம்யா.

 

அன்புள்ள ரம்யா

 

சற்று மூத்தவர் எவரிடம் கேட்டிருந்தாலும் இப்பிரச்சினை பற்றிச் சொல்லியிருப்பார்கள். விலங்குகளுக்கே இப்பிரச்சினை உண்டு. பிட்யூட்டரி இயங்கி பாலை நிறுத்த சற்றுநாட்களாகும். குழந்தை இல்லை என்பதை உடல் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கு உள்ளம் புரிந்துகொள்ளவேண்டும். பெரும்பாலான அன்னையர் அந்த உண்மையுடன் உள்ளம் ஒன்ற நெடுநாட்களாகும். அக்குழந்தை உயிருடனிருக்கின்றது என்ற உருவெளித்தோற்றத்தை உருவாக்கிக்கொண்டு அதிலேயே வாழ்வார்கள்.

 

குழந்தை இருக்கையிலேயே கூட இப்பிரச்சினை இன்றும் உள்ளது. குழந்தை போதுமான அளவுக்கு உண்ணாமலிருக்கும்போது. பால் தேங்கி சீழ்கட்டி பெரிய கட்டிகளாக ஆவதுண்டு. அதற்கு இன்று அலோபதியில் அறுவைசிகிழ்ச்சை செய்வதுகூட உண்டு

 

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 96
அடுத்த கட்டுரைஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா?