ஜெ,
வணக்கம்.
சற்றுமுன் விஜய் தொலைக்காட்சியில் அமேசான் இணையதளத்தில் தமிழ் புத்தகங்கள் கிடைப்பதற்கான விளம்பரம்…
விமான நிலையத்திற்க்கு அவசரமாக கிளம்பும் நபர் “விஷ்ணுபுரம் நாவல் எங்கப்பா??..” என்று மனைவியிடமும் மகளிடமும் கேட்கிறார்.
புத்தகங்களின் வரிசை காண்பிக்கப்படுகிறது. முதலில் பொன்னியின் செல்வன் அடுத்து விஷ்ணுபுரம்(தற்போதைய கிழக்கு பதிப்பின் அட்டை)….
விளம்பரத்தை பார்க்கையில் என்னையறியாமல் சத்தம்போட்டு கூவி கைதட்டினேன்…
இது அமேசான் கிண்டில் இந்தியாவின் விளம்பரம். தொலைக்காட்சி விளம்பரம் மட்டுமன்றி இன்று (28-ஜீலை) யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது…
-யோகேஸ்வரன் ராமநாதன்.
அன்புள்ள யோகேஸ்வரன்
\விஷ்ணுபுரம் மட்டுமல்ல வெண்முரசு நூல்களும் கூட கிண்டிலில் கிடைக்கின்றன என்று சொன்னார்கள். படங்கள் இல்லாமல்
ஜெ
ஜெமோ,
இன்று கேடிவியில் அமேசான் கிண்டிலின் விளம்பரம் பார்த்தேன். அதில் “விஷ்ணுபுரம் முதல் ….வரை அனைத்துப் புத்தகங்களையும் படிக்கலாம்” என்கிறார் அதில் தோன்றும் யுவதி.
சந்தோசமாகவும் பெருமையாகவும் உள்ளது.
அன்புடன்
முத்து|
***
அன்புள்ள முத்து
ஆம், அமேசான் கிண்டிலில் விஷ்ணுபுரம் விற்றுக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். நான் கிண்டில் இன்னும் பயன்படுத்தவில்லை. விலை அதிகம் என தாள்நூலை தவிர்ப்பவர்கள் மின்னூலை பயன்படுத்தலாம்
ஜெ
***
அன்புள்ள ஜெ
அமேசான் கிண்டிலில் விஷ்ணுபுரம் கிடைக்கிறது என்பதை கே டிவி விளம்பரம் மூலம் அறிந்தேன். விஷ்ணுபுரம் போன்ற நூல்கள் அவ்வாறு கிடைத்தாகவேண்டும். ஏனென்றால் பெரிய புத்தகம். போகும் இடங்களிலெல்லாம் கொண்டுபோய் வாசிக்க முடியாது. ஆனால் எப்படியும் ஒரு மூன்றுமாதம் கையிலேயே வைத்திருந்தால்மட்டும்தான் வாசிக்க முடியும். வாழ்த்துக்கள்
ஜெயராமன்
***