ஷண்முகவேல் ஓவியங்கள்- காப்புரிமை

shanஷண்முகவேல் -ஒரு திருட்டு

திரு ஜெயமோகன்  அவர்களுக்கு வணக்கம்..

அமேசான் நிறுவனத்தின் வெஸ்ட் லேண்ட் பதிப்பகம் ஏற்கனவே கூறியபடி, அட்டை ஓவியத்தில் ஓவியரின் பெயர் வரவேண்டிய இடங்களில் பெயர் மாற்றம் செய்வதாக உறுதி அளித்துள்ளனர். வெஸ்ட் லேண்ட் பதிப்பகம் அனுப்பிய அக்ரிமெண்ட் படிவத்தில் கையெழுத்து இட்டு அளித்துள்ளேன்.

இதற்கான கௌரவத் தொகை ரூபாய் 5.000 யும்  வழங்கி உள்ளனர். மிக்க மகிழ்ச்சி. கடும் எழுத்து பணிகளுக்கிடையே உங்கள் தளத்தில் இதை சுட்டியளித்து வெளியிட்ட தங்களுக்கு மிக்க நன்றி.

இதை சாத்தியமாக்கிய நண்பர் சம்பத் அவர்களுக்கும், தொடர்ந்து மின்னஞ்சல்  செய்து இச்செயலை முன்னெடுத்த சுசித்ரா அவர்களுக்கும்  மிக்க நன்றி.  மேலும் இதற்கு தக்க சட்ட ஆலோசனைகள்  வழங்கிய கிருஷ்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

20 வருடங்களுக்கு மேலாக உடன் வரும் வழிகாட்டி  மணிகண்டன் அவர்களுக்கும், மேலும் இதற்கு ஆதரவு அளித்த அணைத்து வெண்முரசு வாசகர்களுக்கும் என் உளம் கனிந்த நன்றிகள்.. .

அன்புடன்
ஷண்முகவேல்

www.shanmuga.net

ஷண்முகவேல்
ஷண்முகவேல் ஓவியநூல்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 63
அடுத்த கட்டுரைஒற்றைவரிக் கதைகள்