அன்புள்ள ஜெ
அ.மார்க்ஸைபற்றி நீங்கள் எழுதிய குறிப்பை அ.மார்க்ஸ்;கடிதம் வாசித்தேன். அவரது கீழ்த்தரமான கட்டுரையை வாசித்தபோது இருபது முப்பது வருடங்களாக அக்கப்போர்களல்லாமல் வேறெதையுமே எழுதாத ஓரு ஆசாமிக்கு தமிழ்மொழி காலாகாலாமாக போற்றிக்கொண்டாடும் மாபெரும் படைப்புகளை எழுதிய ஒரு கலைஞனைப்பற்றி போகிற போக்கில் ஏதாவது சொல்லுவதற்கு என்ன உரிமை இருக்கிறது, தனக்கு என்ன தகுதி இருக்கிறதென எண்ணி இந்த ஆசாமி இதையெல்லாம் எழுதுகிறார் என்ற எண்ணம் ஏற்பட்டு மிகவும் மனக்கஷ்டம் கொண்டேன். இங்கே நண்பர்களிடம் அதைப்பற்றி விவாதித்தேன். ஒரு கணமாவது அந்த ஆசாமிக்கு தான் யார் என்று தோன்றாமலா இருந்திருக்கும்? என்ன எழுதியிருக்கிறார் இவர்? இவரெல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஆன ஒரு காலத்திலும் உங்கள் எழுத்துக்கள் நிற்குமல்லவா? என் சென்னை நண்பருக்கு நான் ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அவர் சொன்னால் தமிழிலே யார் யாரைப்பற்றி எதை எழுதினாலும் போட்டுவிடுவார்கள் என்றார். அவர் முன்பு தமிழ் சிற்றிதழ்களிலே பணியாற்றியவர். அதை நானும் யோசித்தேன். கடந்த காலங்களில் யாரென்றே தெரியாதவர்கள், பேர் சொல்ல ஒரு நாலுவரிகூட எழுத திராணி இல்லாதவர்கள் உங்களைப்பற்றி விசாரணை செய்யும் அதிகாரியின் தோரணையில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். வசைகளை எழுதியிருக்கிறார்கள். தீர்ப்புகள் எல்லாம்கூட சொல்லியிருக்கிறார்கள். தனிப்பட்டமுறையில் யோசித்தான் அவர்களுக்கெல்லாம் வெட்கமாகக்கூட இல்லை! ஆனால் அவையெல்லாம் அச்சாகியிருக்கின்றன. அவற்றை அச்சிடுபவர்களுக்கும் இதை எழுத இவர் யார் என்று தோன்றுவதில்லை. ஆனால் என் நண்பர் சொன்னார், அ.மார்க்சுக்கு உள்ளூக்குள் தெரியும் அவர் ஒரு அன்றாட அரசியல் கட்டுரையாளர் மட்டும்தான் அதுக்குமேலே அவருக்கு ஒரு மதிப்பே கிடையாது என்று என்றார். அவருக்கு ஒரு இடமே இல்லை என்பதை அவரே நன்றாக அறிவார். ஆகவே அந்த தாழ்வுணர்ச்சியினால்தான் அவர் இப்படியெல்லாம் போகிறபோக்கில் எழுதுகிறார் என்றார். இதையெல்லாம் நீங்கள் பொருட்படுத்தக்கூடாது. இதெல்லாம் அன்றாடம் வந்துகொண்டிருக்கும் சருகுகள் என நினைக்கவேண்டும். இவையெலாம் அடுத்த காற்றிலே போகும். நல்ல படைப்புகள்தான் நிற்கும். விஷ்ணுபுரம் வெளிவந்த நாட்களிலே அப்போது எழுதப்பட்ட அரசியல் சர்ச்சைகளும் சண்டைகளும் எல்லாம் இப்போது எங்கே போயின? விஷ்ணுபுரம் மட்டும்தானே நிற்கிறது. அதைமட்டும் நீங்கள் மனதில்கொண்டால்போதும். நீங்கள் எழுத்தாளர். நம்முடைய காலகட்டத்தின் மிகச்சிறந்த தமிழ் நாவலாசிரியர். ஒரு மொழியும் பண்பாடும் பெரிய எழுத்தாளர்களினால் மட்டும்தான் முன்னுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. எதையாவது வாய் அலப்பிக்கொண்டு கிடக்கும் அரசியல்வாதிகளினால் அல்ல. நீங்கள் இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கக் கூடாது. பேசாமல் அசோகவனம் எழுதி வெளியிடுங்கள்.
எம்.கெ
அன்புள்ள ஜெயமோகன்,
அ.மார்க்ஸுக்கு நீங்கள் எழுதிய பதில் அருமை. எங்கே நீங்கள் சீரியசாக எடுத்துக்கொன்டு சர்ச்சையில் இறங்குவீர்களோ என்று பயந்தேன். இந்த ஆசாமிகள் எல்லாம் வெறுப்பிலே பிறந்து வெறுப்பிலேயே ஊறி எழுதுபவர்கள். கூலிப்படைக்காரர்கள். நீங்கல் இவர்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கக் கூடாது
குமாரசாமி அருணாச்சலம்
*8
சார்,
உங்க மார்க்ஸ் என்னும் வழகுரைனர் கட்டுரை படித்தேன். மிகவும் அதிர்ச்சியுற்றேன். உங்கள் கட்டுரை உள் நோக்கம் கொண்டது என எண்ணுகிறேன். இக் கட்டுரை பற்றிய பின்னணி விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்ட விசாரணை கமிட்டி தேவை என நினைக்கிறன். எங்கள் வழகுரைனர் சமுதாயத்தை யாரும் இதற்கு மேல் இழிவுபடுத்த முடியாது என்றேனுகிறேன். உங்களுக்கு வழகுரைனர்கள் மேல் அப்படியென கோபம். மார்ஸ் என்னும் பொய்சொல்லி என்று தலைப்பு வைது இருக்கலாம் அல்லது மார்க்ஸ் என்னும் பித்தலாட்கறேன் அல்லது மார்க்ஸ் என்னும் ஏமாற்று பேர்வழி இப்படி பல நல்ல தலைப்புகள் இருக்கும் போது அதற்கு இணையாக பொருள் கொடுக்க குடிய மார்க்ஸ் என்னும் வழகுரைனர் என்ற தலைப்பை வைத்ததற்காக உங்களை எங்களின் மேன்மைதங்கிய!!! வழகுரைனர் சமுதாயத்தின் சார்பாக மிக கடுமையாக கண்டிக்கிறேன். மகாத்மா காந்தி, செந்திகுமார் (நான்தான்) போன்ற மாபெரும் தலைவர்களை இந்நாட்டுக்கு வழங்கிய வழகுரைனர் சமுதாயத்தை இனிமேலும் இவ்வாறு நீங்கள் இழிவுபடுத்தினால், சட்டகல்லுரி மாணவர்கள் தங்கள் வீட்டிற்கு வரவேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை அகிம்சை!!! வழியில் தெரிவித்து கொள்கிறேன்.
பி.கு. உங்கள் கட்டுரைக்கு பதிலடியாக “சாருநிவேதா என்னும் எழுத்தாளர்” என்ற கட்டுரையை பிரசுரிக்க ஒரு திட்டம் உள்ளது.
செந்தில்குமார்
88
அன்புள்ள ஜெயமோகன்;
வணக்கம்.
ஆ.மார்க்ஸ் அவர்களின் கட்டுரையையும் உங்களின் எதிர்வினையும் படித்தேன்.
மாற்று தரப்பின் குரலை ஒலிக்க விடாமல் செய்வதில் அவருக்கிருக்கும் பயிற்ச்சி அபாரமானது. உங்களின் கட்டுரை அற ஆவேசத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.
அது ஒரு சராசரி இந்தியனின் மனநிலை.எனக்கு தெரிந்து ஒரு பழமொழி உண்டு அறிஞர்கள் அருவருக்கத்தக்க செயல்களை வெருக்கிரார்களே ஒழிய செய்தவனை அல்ல. கட்டுரை ஒவ்வொரு அடியிலும் உள்ள தனி மனித தூஷணை அவரால் கண்டிப்பாக உண்மையை உணர முடியாது என்று உணர வைத்தது.
இந்த புத்திசாலியை விடவும்
தன்னுடைய மனசாட்சியை அடகு வைக்காத எளிய மக்களின் அமைதியும் ஆத்மபலமும் நமக்கு பெருத்த நம்பிக்கையை அளிக்கிறது.சமீபத்தில் குண்டு வெடிப்பில் காயம்மடைந்த ஒரு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் துர்ப்பாக்கியமான காட்சியை டி.வீயில் பார்க்க நேர்ந்தது. அது வலியில் அலறி துடித்த காட்சி நெஞ்சை பிசைந்தது. அதை ஆ.மார்க்ஸ் போன்ற அறிவாளிகள் புரிந்து கொள்வதை விட இரண்டு குழந்தைகளின் தந்தை சரியாகவே புரிந்து கொள்ள முடியும்.
அன்புடன்
சந்தோஷ்
888
—
அன்புள்ள ஜெ
அ.மார்க்சைப்பற்றி நீங்கள் ஏன் அவ்வளவு பெரிதாக எழுத வேண்டும்? அவர் என்ன எழுதினாலும் உங்களுக்கு என்ன ஆகிவிடும். உங்களைப்பற்றி இனிமேலேதான் அவதூறுகளும் திட்டுகளும் வரவேன்டுமா? இணையத்தில் உங்கள் எழுத்துக்களை வாசிப்பவர்கள் பத்துமடங்கு அவதூறுகளை ஏற்கனவே வாசித்துவிட்டுத்தான் இங்கே வாசிக்க வருகிறார்கள். நீங்கள் எழுதிய ஒரு கதையையாவது அ.மார்க்ஸால் புரிந்துகொள்ள முடியுமா? அவருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? அவரைப்போல நூறுபேர் தமிழிலே எழுதிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களை நீங்கள் ஏன் பெரிதாக நினைக்கவேன்டும்?
சுகுமார்
கோவை