பெரியம்மாவின் சொற்களுக்கு சர்வதேசப் பரிசு

q

ASYMPTOTE என்னும் இலக்கிய இதழ் சர்வதேச அளவில் புகழ்பெற்றது. தைவானிலிருந்து வெளிவரும் அவ்விதழ் உலக இலக்கியத்தை மொழியாக்கங்களினூடாக அறிமுகப்படுத்துவது. சர்வதேச அளவில் முக்கியமான இலக்கிய இதழுக்கான விருதுகளைப்பெற்றது அது.

அவ்விதழ் நிகழ்த்தும் சிறுகதைப் போட்டிக்கு என்னுடைய பெரியம்மாவின் சொற்கள் என்னும் சிறுகதையை என் வாசகியும் நண்பருமான சுசித்ரா ராமச்சந்திரன் மொழியாக்கம் செய்து அனுப்பியிருந்தார். அது முதற் பரிசுக்குரியதாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

என்னுடைய குரலிலேயே மூலத்தில் கதையை வாசிக்கச்செய்து ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.  கதையும் பிரசுரமாகியிருக்கிறது.

இந்த போட்டிக்கு இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட 215 கதைகளில் இருந்து இச்சிறுகதை தேர்வுசெய்யப்பட்டது. அடுத்த நிலையில் வந்த எரிக்கா கோபயாஷியின் See என்னும் கதையையும் எல்விரா டோன்ஸ்-ன் Burnt Sun என்னும் கதையையும் பிரசுரித்திருக்கிறார்கள்.

என் கதையை விமர்சகரான டேவிட் பெல்லோஸ் [David Bellos] தேர்வுசெய்திருக்கிறார்.

ANNOUNCING THE WINNERS OF THE 2017 CLOSE APPROXIMATIONS CONTEST!

Periyamma’s Words

=======================================
பெரியம்மாவின் சொற்கள் [சிறுகதை]
பெரியம்மாவின் சொற்கள்- கடிதம் 3
பெரியம்மாவின் சொற்கள் -கடிதம் 1

***

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 57
அடுத்த கட்டுரைஎன்ன வேண்டும் ? வலிமை வேண்டும்!