கோவை புத்தகக் கண்காட்சி- இலக்கிய உரையாடல்கள்

IMG-20170716-WA0061

 

கோவை புத்தகக் கண்காட்சியை ஒட்டி இலக்கிய உரையாடல்களை நிகழ்த்தவேண்டும் என்று அமைப்பாளர்கள் திட்டமிட்டார்கள். வழக்கமாக புத்தகக் கண்காட்சிகளில் மிகப்பிரபலமான சொற்பொழிவாளர்களின் உரைகள் அமைக்கப்படும். அதற்கு தனி கூட்டம் உண்டு. ஆனால் அவர்களில் கணிசமானவர்கள் நூல்களுடன் சம்பந்தமற்றவர்கள். புத்தகக் கண்காட்சியை எட்டிக்கூட பார்க்காதவர்கள் அவர்களில் மிகுதி.

கோவையில் இலக்கிய உரையாடல்களாக அந்நிகழ்ச்சி அமையவேண்டும் என எண்ணியிருக்கிறார்கள். ஆகவே பெரிய பேச்சாளர்கள் இலக்கியவாதிகள் என ஒரு கலவையாக, அனைத்துத் தரப்பினருக்கும் உகந்த முறையில் உரையாடலை ஏற்பாடுசெய்திருக்கிறார்கள். தமிழின் முக்கியமான ஆளுமைகள் இதில் கலந்துகொள்கிறார்கள். நண்பர்கள் பங்கெடுக்கவேண்டுமென விழைகிறேன்.

முந்தைய கட்டுரைஇச்சையின் சிற்றோடைகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 56