கோவை புத்தகக் கண்காட்சி, விருது, சொற்பொழிவு

koovai

கோவையில் 21-7-2017 முதல் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. சிறப்பு விருந்தினராக நான் கலந்துகொள்கிறேன்.

21 ஜூலை மாலை ஆறுமணிக்கு  நிகழும் விழாவில் விழாவில் கொடீஷியா வழங்கும் வாழ்நாள்சாதனைக்கான இலக்கிய விருது எனக்கு அளிக்கப்படுகிறது.

இவ்விருது எனக்கு ஒருவகையில் முக்கியமானது. சென்ற சிலநாட்களாக நான் இரண்டு விஷயங்களுக்காக நண்பர்களிடம் நிதிகோரியிருந்தேன். ஊட்டி நித்யா குருகுலத்தில் சுற்றுச்சுவர் அமைப்பதற்காக. இன்னொன்று சிறுநீரகக் கோளாறால் அவதிப்படும் இலக்கிய நண்பருக்காக. நண்பர்களின் உதவிகள் போதிய அளவில் இல்லை என்பதை வருத்தத்துடன் சொல்லவேண்டியிருக்கிறது. என் சொந்தப்பணம் நிறைய கொடுக்கும்படி ஆயிற்று.நானும் பெரிய அளவில் கொடுக்கும்நிலையில் இன்று இல்லை. இவ்விருதுத் தொகையையும் இரண்டாகப்பிரித்து இருவருக்கும் அளிக்கலாமென முடிவுசெய்திருக்கிறேன்.

விருது ஏற்புரையாக ஒரு தனியுரை ஆற்றவேண்டும் என்று கோரினார்கள். தமிழகத்தை மாற்றிய ஐந்து நூல்கள் என்னும் தலைப்பில் பேசவேண்டும் என்பது நண்பர்களின் கோரிக்கை. பேசலாமென எண்ணுகிறேன்.

20 மாலை நாகர்கோயில் கோவை ரயிலில் கோவை வருவேன். 25 மாலை இன்னொரு நிகழ்ச்சியில் பேசுகிறேன். 26 மாலை திரும்புகிறேன். நண்பர்களைச் சந்திக்க ஆவல்

 

ஜெ .

 

 

 

முந்தைய கட்டுரைபனிமனிதன் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுழங்குதல்