ஒரு பொழுதுபோக்கு நாவல் நாம் வாசிக்கும் போது அது நம்மை எந்த விதத்திலும் பாதிக்காமல் கடந்து செல்லும். மானுட அறத்தைப் பற்றிப் பேசும் புத்தகங்களை நாம் வாசிக்கும் பொழுது நம் மனநிலை என்ன என்பது முக்கியம். சில கதைகளை நாம் முதல்முறை வாசிக்கும் போது நமக்கு பிடிக்காமலும் அதில் நாம் ஒன்றும் புரிபடாமலும் போகலாம். அதே கதையை வேறு தளத்தில் காலத்தில் வாசிக்கும் போது அது நமக்கு பிடிபடும். அந்த வகை சார்ந்தது ‘அறம்’…