ஆத்மாநாம் விருதுகள்

கவிஞர் ஆத்மாநாம் பெயரில் வழங்கப்படும் கவிதைவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிதைக்கான விருது பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்புக்காகக் கவிஞர் அனார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது

anar

மொழியாக்கத்திற்கான விருது தாகங்கொண்ட மீனொன்று தொகுப்புக்காக என்.சத்யமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது

ஈழப் பெண்கவிஞர்களில் ஆழியாள், அனார், பஹீமா ஜகான் ஆகிய மூவரும் முக்கியமானவர்கள் என்பது என் எண்ணம். அவர்களில் அனார் மிகுந்த தீவிரத்துடன் தொடர்ந்து எழுதிவருகிறார். அனார் குறித்து முன்னரும் எழுதியிருக்கிறேன்

என்.சத்யமூர்த்தி ஜவகர்லால்நேரு பல்கலை மாணவராக இருக்கையிலேயே எனக்கு அறிமுகமாகி இன்றும் நீடிக்கும் நண்பர். அவருடைய தாகங்கொண்ட மீனொன்று மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்ட சிறந்த மொழியாக்கம்

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

***

மறுபக்கத்தின் குரல்கள் :மூன்று ஈழப்பெண்கவிஞர்கள்

***

முந்தைய கட்டுரைவேதா நாயக் – இலக்கிய ஓவியங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 44