ஜெயமோகனைத் தெரியுமா?
தெரியும்
படித்திருக்கிறீர்களா?
இருக்கிறேன்
பழகியிருக்கிறீர்களா?
இருக்கிறேன்
அவர் எழுதிட்டே இருப்பாரா
ஆமாம்
நல்லா எழுதுவாரா?
ஆமாம்
பேசிட்டே இருப்பாரா?
ஆமாம்
நல்ல பேசுவாரா?
ஆமாம்
நல்ல மனுஷரா?
அப்படித்தான் தெரியுது
ரொம்பப் பெரிய எழுத்தாளரோ?
தமிழில் முக்கியமான எழுத்தாளர்
பணக்கஷ்டம் ஏதும் உண்டோ?
அப்படி எதுவும் தெரியல
ஒருமாதிரி என்கிறார்களே!
சேச்சே! நல்லா எழுதறவங்க எல்லாரும் அவங்க உலகத்தில் இருப்பாங்க. அவ்ளோதான்
மனைவி, குழந்தைகள்?
அற்புதமான குடும்பம் அவருக்கு. அன்பான மனைவியும் நல்ல குழந்தைகள் – ஒரு பையனும் ஒரு பொண்ணும்
வேற ஏதும் பிரச்னை அவருக்கு?
அப்படி ஒண்ணும் எனக்குத் தெரியலியே
ஏன் இதெல்லாம் கேட்கறீங்க. அவர் எழுத்து அவ்ளோ பிடிக்குமா?
சேச்சே, படிக்க எனக்கு ஏது நேரம். பையன் பிறந்திருக்கு. ஜெ-ல் ஆரம்பிக்கிற பேர் வைக்கணுமாம். ஒருத்தர் ஜெயமோகன்னு வைங்க. பெரிய எழுத்தாளர் பேரு, ராசியா இருக்கும்னு சொன்னார். அதான் உங்ககிட்டே விசாரிச்சிக்கிட்டேன்.
*
நான் எழுதிய குறிப்பு
பி கே சிவக்குமார்
***
அன்புள்ள பி.கே.சிவக்குமார்
அருண்மொழியிடம் காட்டினேன். ”நியூ ஜெர்சிக்காரர்தானே?”
“ஆமாம்” என்றேன்
“என்னது இவ்ளவு நல்ல ஃப்ரண்ட். கேட்டா சரியா சொல்லவேண்டியதுதானே?” என்றாள்
”என்ன?’ என்றேன்
“எல்லாம் ஓக்கே. ஆனா வாரத்துக்கு ரெண்டுநாள் கொஞ்சம் ஸ்க்ரூ லூஸா இருக்கும்னு?” என்றாள்
ஜெ
***